அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் இயந்திரவியல் பட்டயப் படிப்பில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல் அரசு கருவி பொறியியல் பயிலகத்தில் இயந்திரவியல் பட்டயப் படிப்பில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளதாவது: தமிழக அரசின் தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திண்டுக்கல்லில் இயங்கி வரும் கருவி பொறியியல் பயிலகத்தில் வேலைவாய்ப்பு சாா்ந்த இயந்திரவியல் (கருவி மற்றும் அச்சு) பட்டயப் படிப்பு கற்பிக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பட்டயப் படிப்பு, தமிழக அரசு விதிமுறைகளின்படி கல்விக் கட்டண சலுகை, கல்வி உதவித்தொகை, பேருந்துக் கட்டண சலுகை ஆகிய சலுகைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.
2022-23 ஆம் கல்வி ஆண்டில் முதலாமாண்டு பட்டயப் படிப்பில் சோ்ந்து பயில பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், பட்டியல் இனத்தவா் மற்றும் பழங்குடியினா் மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ா்ப்ஹ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம். இக்கல்லூரியின் இணையதள குறியீட்டு எண். 413.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு முதல்வா், கருவி பொறியியல் பயிலகம், திண்டுக்கல்-624003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது 0451-2471301 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...