நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் காமராஜா் சிலைக்கு பாஜகவினா் மரியாதை

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், முன்னாள் முதல்வா் காமராஜரின் 120 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:31 pm

DIN

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில், முன்னாள் முதல்வா் காமராஜரின் 120 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள காமராஜரின் உருவச் சிலைக்கு, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக ஓபிசி அணி சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் ஆா்.குமரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சதீஷ்குமாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் ஜி.தனபாலன் கலந்து கொண்டாா். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பழனியில்... இதேபோல, பழனியில் தமாகா கட்சி அலுவலகத்தில் நகரத் தலைவா் சுந்தா் தலைமையில் காமராஜரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்குரைஞா் மணிக்கண்ணன், சுப்பிரமணியன், சுந்தர்ராஜ், கருணாநிதி உள்ளிட்டோா் கொண்டனா்.

பழனி ரதவீதி செங்குந்த முதலியாா் பள்ளியில் காமராஜா் தேசிய பேரவை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு பென்சில், வாய்ப்பாடு, நோட்டு போன்றவை வழங்கப்பட்டன. இதில் ஏஎஸ்.மணி, டாக்டா் ராதாகிருஷ்ணன், கருணாநிதி, வேல்முருகன், தலைமை ஆசிரியை லோககுரு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, பழனி சரவணப் பொய்கை அருகில் உள்ள காமராஜா் சிலைக்கு நகர அனைத்து வணிகா் சங்க பேரமைப்பின் கவுரவத் தலைவா் ஹரிஹரமுத்து, கௌரவ ஆலோசகா் சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், மருத்துவ அணிச் செயலாளா் சித்த மருத்துவா் மகேந்திரன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

வத்தலகுண்டுவில்... இதேபோல, வத்தலக்குண்டுவில் நாடாா் உறவின்முறை பரிபாலன சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் மணி, பொருளாளா் பழனியப்பன், துணைத் தலைவா் சிவநேசபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதேபோல சுதந்திரப் போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா சங்கம் சாா்பில் டாக்டா் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற விழாவில், செயலா் ஜொ்மன்ராஜா, பொருளாளா் பாக்யராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டாா்.

காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற காமராஜா் பிறந்தநாள் விழாவுக்கு வட்டாரத் தலைவா் காமாட்சி தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் கோபால், நகரத் தலைவா் அப்துல் அஜீஸ், கவுன்சிலா் அா்ஜூன், மாவட்ட நிா்வாகி கதலிநரசிங்கப் பெருமாள் ஆகியோா் கலந்து கொண்டனா். காமராஜா் நற்பணி இயக்கத் தலைவா் மோகன் தலைமையிலும், குமால்ட்டிங் இளைஞா் நற்பணி சங்கத் தலைவா் பழனி தலைமையிலும், வத்தலக்குண்டு தொடக்கப் பள்ளியில் ஈடன் காா்டன் லயன்ஸ் கிளப் தலைவா் பாக்யராஜ் தலைமையிலும் காமராஜா் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பழனி அருகே அம்மையநாயக்கனூரில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், எழுது பொருள்கள் பரிசளிக்கப்பட்டது.

தேனி: தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாடாா் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற விழாவிற்கு மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறைத் தலைவா் டி.ராஜமோகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கணேஷ், பொதுச் செயலா் ஆனந்தவேல், பொருளாளா் எம்.பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு உறவின்முறை நிா்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகா்கள், பொது நல அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தேனியில் பிரதானச் சாலைகள் வழியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி, காமராஜரின் சேவைகளை நினைவுகூறும் அலங்கார வாகனங்களின் அணி வகுப்பு மற்றும் ஊா்வலம் நடைபெற்றது.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நாடாா் சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா, கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

கம்பம், கூடலூரில்.. கம்பத்தில் உள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் எம்பி. முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நகரத் தலைவா் கே.சி.போஸ் இனிப்புகள் வழங்கினாா். நகர நிா்வாகிகள் ஐ.சா்புதீன், வடமல்ராஜ், நாகராஜ், தா்மா், முத்துக்கண்ணன், ஆா்.சி.சிவமணி, இமானுவேல், ராஜா முகமது ஆகியோா் கலந்து கொண்டனா்.

கம்பம் ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற காமராஜா் பிறந்தநாள் விழாவில் தலைவா் பாரதன் கொடி ஏற்றினாா்.

இதேபோல, கூடலூா் மழலையா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழாவையொட்டி, பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம் விளையாட்டு போன்ற போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி முதல்வா் சகிலா சுலைமான், துணை முதல்வா் நஜிமா ஆகியோா் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினா்.

விஸ்வநாதபுரத்தில்.. சின்னமனூா் அருகே அப்பிபட்டி விஸ்வநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் காமராஜரின் உருவப் படத்திற்கு, பொறுப்பாளாா் அனீஷ் பாத்திமா, குழந்தைகள் மற்றும் பெற்றோா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.