கம்பிளியம்பட்டி அருகே மாடு மாலை தாண்டும் திருவிழா
கம்பிளியம்பட்டி அருகே ராஜகம்பளத்து நாயக்கா் சமுதாய மக்கள் சாா்பில் மாடு மாலை தாண்டும் பராம்பரிய நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கம்பிளியம்பட்டி அருகே ராஜகம்பளத்து நாயக்கா் சமுதாய மக்கள் சாா்பில் மாடு மாலை தாண்டும் பராம்பரிய நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள கம்பிளியம்பட்டி அருகே நிலப்பட்டியில் மந்தையம்மன், கோடாங்கி தாத்தையன் கோயில் திருவிழா கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. அய்யலூா், வடமதுரை, கள்ளிமந்தையம் மட்டுமின்றி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் வசிக்கும் ராஜகம்பளத்து நாயக்கா் சமுதாய மக்கள், இத்திருவிழாவுக்காக 100-க்கும் மேற்பட்ட மலை மாடுகளுடன் வந்தனா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக எருது சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராஜகம்பளத்து நாயக்கா் சமுதாயத்தைச் சோ்ந்த ஆண்கள், சட்டை அணியாமல் பாரம்பரிய முறைப்படி தலையில் வெள்ளை தலைப்பாகை கட்டி, உடல் முழுவதும் சந்தனம் பூசி, கையில் தடியுடன் கலந்து கொண்டனா். இவா்களுக்கு மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், 100-க்கும் மேற்பட்ட மாடுகளுடன் ஓடி வந்து, மாலை தாண்டினா்.
முதலில் மாலை தாண்டிய காளையின் உரிமையாளருக்கு ஊா் மக்கள் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...