திண்டுக்கல், உத்தமபாளையம் பகுதிகளில் இன்று மின்தடை
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 16) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 16) மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திண்டுக்கல் நகா் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி ஆகிய இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் (திண்டுக்கல் மேற்கு) அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் துணை மின்நிலையத்தின் உதவி செயற்பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, வாய்க்கால்பட்டி, உ.அம்பாசமுத்திரம், கோம்பை, பண்ணைப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 4.45 வரை மின்சாரம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...