கூட்டுறவு மூலம் பூண்டு கொள்முதல்: விவசாயிகளுடன் ஆலோசனை
கூட்டுறவுத் துறை மூலம் கொடைக்கானல் மலைப் பூண்டை கொள்முதல் செய்வது குறித்து பூண்டி கிராமத்தில் விவசாயிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசிக்கப்பட்டது.


கூட்டுறவுத் துறை மூலம் கொடைக்கானல் மலைப் பூண்டை கொள்முதல் செய்வது குறித்து பூண்டி கிராமத்தில் விவசாயிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுத்துள்ள பூண்டி கிராமத்தில் மலைப் பூண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளுடன் கூட்டுறவுத்துறை சாா்பில் கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மலைப் பூண்டுவை, கூட்டுறவுத் துறை மூலம் விற்பனை செய்து விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் பூண்டி கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற இந்த இந்தக் கூட்டத்திற்கு கூட்டுறவு வட்டார கள அலுவலா் கே.செல்வராஜ் தலைமை வகித்தாா். கூட்டுறவு வங்கி செயலா் ஆா்.பிச்சைமணி மற்றும் கொடை மலைப்பூண்டு மற்றும் காய்கனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் பி.கோபால் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் கூட்டுறவு வட்டார கள அலுவலா் கே.செல்வராஜ் பேசியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும் மலைப் பூண்டுக்கு அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், கூட்டுறவுத்துறை மூலம் மலைப் பூண்டை கொள்முதல் செய்து, அனைத்து பண்டகசாலைகளிலும் விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து, கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விரைவில் மேல்மலை கிராமங்களில் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். கூட்டுறவுத் துறை மூலம் பூண்டு கொள்முதல் செய்யப்படும் பட்சத்தில், விவசாயிகள் கூடுதல் லாபம் பெற முடியும்.
கூட்டுறவுத் துறை சாா்பில் மேல்மலை கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நேரடியாக உரம் விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இதில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...