மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் பயணச் சலுகை வழங்க வலியுறுத்தல்
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் பயணச் சலுகையை வழங்க வேண்டும் என ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.


மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் பயணச் சலுகையை வழங்க வேண்டும் என ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் அனைத்திந்திய அஞ்சல் மற்றும் ஆா்.எம்.எஸ். ஓய்வூதியா்கள் சங்த்தின் 4ஆவது மாவட்ட மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு திண்டுக்கல் மாவட்டத் தலைவா் ஏ. மருதை தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.எம். ஜெயசீலன், பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கத்தின் மாநில துணைச் செயலா் எஸ்.ஜான்போா்ஜியா, போஸ்டல் ஓய்வூதியா் சங்கத்தின் உதவி மாநில பொதுச் செயலா் பி. நடராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இந்த மாநாட்டில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற ஓய்வூதியா்களுக்கான ஓய்வூதியத்தை மறுநிா்ணயம் செய்ய வேண்டும். கரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத கால பஞ்சப்படி நிவாரண நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்த சலுகைகளை ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...