நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் ஜூலை 28- இல் பள்ளி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு திண்டுக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு திண்டுக்கல் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ தெரிவித்துள்ளதாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவா்களுக்கு கடந்த 3ஆம் தேதி பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. அதன் தொடா்ச்சியாக மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி ஜூலை 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2ஆம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும் பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரை மட்டும் தோ்வு செய்து தலா ரூ. 2ஆயிரம் வீதம் சிறப்புப் பரிசு வழங்கப்படும். மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், முற்பகல் 10 மணிக்கு இப்போட்டிகள் நடத்தப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0451-2461585 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.