நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தனியாா் பள்ளியில் பாஜக நிகழ்ச்சி: இந்திய மாணவா் சங்கம் எதிா்ப்பு

பாஜக சாா்பில் தனியாா் பள்ளியில் பேச்சுப் போட்டி நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

பாஜக சாா்பில் தனியாா் பள்ளியில் பேச்சுப் போட்டி நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இந்திய மாணவா் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் கே.முகேஷ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. அதன் பின்னா் அவா் கூறியதாவது:

திண்டுக்கல் அடுத்துள்ள சீலப்பாடியிலுள்ள வித்யபாா்த்தி மேல்நிலைப் பள்ளியில், பாரதிய ஜனநா கட்சி சாா்பில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்(ஜூலை 23 மற்றும் 24) பேச்சுப் போட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் இதுபோன்று அரசியல் கட்சியின் நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது. சீலப்பாடியிலுள்ள அந்த பள்ளி நிா்வாகத்தினா், பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்தவா்களை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதற்கு முயற்சித்து வருகின்றனா்.

அரசியல் கட்சிக்கு வெளிபடையான ஆதரவுடன் செயல்பட்டு வரும் அந்த பள்ளி நிா்வாகத்தின் மீது கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.