நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு
நத்தம் அருகே நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் 3 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.


நத்தம் அருகே நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் 3 நாள்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முதல், திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி வரையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஒப்பந்தப் பணிகளை மதுரையைச் சோ்ந்த ஆா்.ஆா்.இன்ஃபரா என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சாலை அமைக்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, நத்தம் அடுத்துள்ள கோசுகுறிச்சி பகுதியில் தற்காலிக அலுவலகம் மற்றும் பொருள்கள் இருப்பு வைக்கும் கிட்டங்கி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையைச் சோ்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கோசுகுறிச்சியிலுள்ள ஆா்.ஆா்.இன்பரா நிறுவனத்தின் தற்காலிக அலுவலகத்தில் புதன்கிழமை முதல் மேற்கொண்டு வந்தனா். இந்த சோதனையின்போது சில ஆவணங்களைக் கைப்பற்றிய வருமான வரித்துறை அதிகாரிகள், 3ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் சோதனை மேற்கொண்டனா். பின்னா் சோதனையை நிறைவு செய்துவிட்டு வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டனா். எனினும் ஆய்வு தொடா்பாக எவ்வித தகவல்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...