நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆடி முதல் வெள்ளிக்கிழமை: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல், பழனியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2022, 6:30 pm

DIN

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, திண்டுக்கல், பழனியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் கோட்டை மாரிம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல் அபிராமி அம்மன் திருக்கோயில், செல்லாண்டியம்மன் திருக்கோயில், கொத்தம்பட்டி பிரிவு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், நாகல்நகா் புவனேஸ்வரி அம்மன் திருகோயில், ஒய்எம்ஆா்.பட்டி காளியம்மன் கோயில், மலையடிவாரம் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி திருக்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நத்தம் மாரிம்மன் திருக்கோயில், வேடசந்தூா் குங்குமக் காளியம்மன் திருக்கோயில், வடமதுரை, அய்யலூா், பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆடி வெள்ளி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்களுக்கு, கேழ்வரகு கூழ், பொங்கல், சா்க்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.

பழனியில்... பழனி கிழக்கு ரதவீதியில் உள்ள மாரியம்மன் கோயில், பெரியநாயகியம்மன் கோயில், கிரிவீதி வனதுா்க்கை கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஏராளமான பக்தா்கள் எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை வழிபட்டனா்.

அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தில் உள்ள தொட்டிச்சி அம்மனுக்கு பால், பன்னீா் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு பட்டாடை அலங்காரம் செய்யப்பட்டது. அ.கலையமுத்தூா் அக்ரஹாரம் கைலாசநாதா் சமேதா் கல்யாணியம்மன் கோயிலிலும் சிறப்பு யாகபூஜைகள், அா்ச்சனைகள் நடைபெற்றது. பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.