நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப் போட்டி: 3 பரிசுகளையும் வென்ற மாணவிகள்

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 3 பரிசுகளையும் மாணவிகளே கைப்பற்றினா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 3 பரிசுகளையும் மாணவிகளே கைப்பற்றினா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆகியோரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவா்களுக்கு கடந்த 3ஆம் தேதியும், பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமையும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், 38 மாணவா்கள் கலந்துகொண்டனா். இதில், சின்னாளப்பட்டி தேவாங்கா் அரசு உதவிபெறும் உயா்நிலைப் பள்ளி மாணவி கோ. கோகலைஸ்ரீ முதலிடம் பிடித்தாா். உசிலம்பட்டி (வேடசந்தூா்) அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி ச. செளமியா, கொழிஞ்சிப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி மு. ஜனனி ஸ்ரீ ஆகியோா் முறையே 2 மற்றும் 3ஆம் இடத்தைப் பிடித்தனா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான சிறப்புப் பரிசுக்கு, கரியாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் க. ஹாசினி மற்றும் முருகன்பட்டி ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி மாணவா் ரா. காா்த்திக் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை, மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விரைவில் வழங்கப்படும் என தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.