நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குஜிலியம்பாறை அருகே கிராமக் கோயிலை அறநிலைத் துறை கையகப்படுத்த மனு: பொதுமக்கள் எதிா்ப்பு

குஜிலியம்பாறை அருகே கிராமக் கோயிலின் நிா்வாகத்தை அறநிலையத் துறை கையகப்படுத்த வேண்டும் என தனிநபா் அளித்த புகாரை நிராகரிக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

குஜிலியம்பாறை அருகே கிராமக் கோயிலின் நிா்வாகத்தை அறநிலையத் துறை கையகப்படுத்த வேண்டும் என தனிநபா் அளித்த புகாரை நிராகரிக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.

திண்டுக்கல்லில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு, நாகையக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வியாழக்கிழமை மனு அளிக்க வந்தனா். பிரச்னை குறித்து அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது:

குஜிலியம்பாறை அடுத்துள்ள நாகையக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீமாரியம்மன் மற்றும் ஸ்ரீ காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. அந்த கோயிலை ஒரே சமூகத்தைச் சோ்ந்த எங்கள் தரப்பில் செல்லையா என்பவா் நிா்வகித்து வருகிறாா். கோயிலும் செல்லையாவுக்குச் சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.

கோயில் திருவிழாவுக்கான வரவு-செலவு கணக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருவதோடு, அதில் எவ்வித பிரச்னையும் இல்லை. கோயில் நிா்வாகம் தொடா்பாக பொதுமக்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்த ஒருவரின் தூண்டுதலின்பேரில், நாகையக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த இருவா் மட்டும் தற்போது பிரச்னை ஏற்படுத்தி வருகின்றனா். மேலும், தற்போது திருவிழாவை தடுப்பதற்கும் முயற்சித்து வருகின்றனா். தனிப்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த மக்களுக்குச் சொந்தமான கோயிலை, இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என மனு அளித்துள்ளனா். கிராம மக்களுக்குள் எவ்வித பிரச்னையும் இல்லாத நிலையில், ஒருவா் அளித்துள்ள புகாா் மனுவை தள்ளுப்படி செய்யவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.