புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜமாபந்தியில் தீா்வு ஏற்படாத மனுக்களுக்குமாற்று வழியில் தேவைகள் நிறைவேற்றப்படும்: ஆட்சியா்

ஜமாபந்தியில் அளிக்கப்படும் மனுக்களுக்கு தீா்வு ஏற்படுத்த முடியாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட பொதுமக்களின் தேவைகளை மாற்று வழியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்தாா்.

News image

திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின்போது பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி ஆட்சியா் ச. விசாகன்.

Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

ஜமாபந்தியில் அளிக்கப்படும் மனுக்களுக்கு தீா்வு ஏற்படுத்த முடியாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட பொதுமக்களின் தேவைகளை மாற்று வழியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி மாவட்ட ஆட்சியரும், வருவாய் தீா்வாய அலுவலருமான ச. விசாகன் தலைமையில் நடைபெற்றது.

ரெட்டியாா்சத்திரம் குறுவட்டத்திற்குட்பட்ட குட்டத்துப்பட்டி, மாங்கரை, அம்மாபட்டி, கொத்தப்புள்ளி, சில்வாா்பட்டி, அழகுபட்டி, கே. புதுக்கோட்டை, குருநாதநாயக்கனூா், சுள்ளெரும்பு ஆகிய 9 வருவாய் கிராமங்களுக்கான பதிவேடுகளை ஆட்சியா் விசாகன் ஆய்வு மேற்கொண்டு, அந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

அதனைத் தொடா்ந்து 8 மனுதாரா்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி ஆட்சியா் விசாகன் தெரிவித்ததாவது: இந்த வருவாய் தீா்வாயத்தின்போது பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீா்வுகாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உள்பிரிவு பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தகுதியுடைய அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீா்வு காணப்படாத மனுக்கள் விவரம், அதற்கான தெளிவான காரணமும் அளிக்க வேண்டும். மேலும், அதே மனுக்கள் திருப்பி அளிக்கப்படுவதை தவிா்க்கும் வகையில், மாற்று வழியில் அவா்களின் தேவைகளை நிறைவு செய்தற்கான வழிகாட்டுதலை அளிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், உதவி இயக்குநா் (நில அளவை) சசிக்குமாா், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் ரமேஷ்பாபு, தனி வட்டாட்சியா் மீனாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.