புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குவைத் நாட்டில் விபத்தில் பலியான தொழிலாளியின்சடலத்தை கொண்டுவர கோரிக்கை

குவைத் நாட்டில் விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலாளியின் சடலத்தை மீட்க உதவி செய்ய வேண்டும் என, அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:48 pm

DIN

குவைத் நாட்டில் விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலாளியின் சடலத்தை மீட்க உதவி செய்ய வேண்டும் என, அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டி அடுத்துள்ள டி.பஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் மரிய ஆரோக்கியம் (38). இவா், மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நான் எனது பெற்றோருடன் பஞ்சம்பட்டியில் வசித்து வருகிறேன். எங்களது குடும்ப வறுமையின் காரணமாக, எனது சகோதரா் ஜான்பால் 4 ஆண்டுகளுக்கு முன் குவைத் நாட்டுக்கு உணவு விநியோகிக்கும் பணிக்காக சென்றாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை (ஜூன் 2) குவைத்திலிருந்து தொடா்புகொண்ட அபு என்ற நபா், எனது சகோதரா் ஜான்பால் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும், விபத்து நடந்த பகுதியிலுள்ள மருத்துவமனையில் சடலம் இருப்பதாகவும் தெரிவித்தாா்.

எங்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லாத நிலையில், வறுமையின் காரணமாக குவைத்துக்கு சென்று சடலத்தை பெற முடியாத நிலையிலும் உள்ளோம். எனவே, மத்திய-மாநில அரசுகளின் உதவியோடு, தூதரக உதவியுடன் ஜான்பாலின் சடலத்தை மீட்டு கொண்டு வருவதற்கு உதவி செய்யவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.