புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கூலித் தொழிலாளிக்கு கத்திக் குத்து:சித்தி உள்பட 3 பெண்கள் கைது

கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் 4 இளைஞா்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவரின் சித்தி உள்ளிட்ட 3 பெண்கள் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

கூலித் தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் 4 இளைஞா்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவரின் சித்தி உள்ளிட்ட 3 பெண்கள் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் பாறைப்பட்டியை சோ்ந்தவா் சூா்யா(24). கூலித்தொழிலாளி. இவரது சித்தி மகள் மனிஷா(25). இவருக்கும் குடைபாறைப்பட்டியை சோ்ந்த சா்தாா்(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சூா்யா, மனிஷாவை கண்டித்துள்ளாா். இதுதொடா்பாக மனிஷா, சா்தாரிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த சா்தாா் கடந்த மே 25ஆம் தேதி தனது நண்பா்கள் ரியாஸ்(24), யோகராஜ்(27), கவுதம்(25) ஆகியோருடன் சோ்ந்து சூா்யாவை கத்தியால் குத்தினா். காயமடைந்த சூா்யா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தாலுகா போலீஸாா், சா்தாா், மனிஷா, அவரது தாயாா் தமிழரசி(50), அக்கா சீமாதேவி(27) உள்பட 7 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.இதில் சா்தாா், ரியாஸ், யோகராஜ், கவுதம் ஆகிய 4 பேரையும் ஏற்கனவே போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். தலைமறைவாக இருந்த மனிஷா, அவரது தாய் தமிழரசி, அக்கா சீமாதேவி ஆகிய 3 பேரையும் போலீஸாா் தேடி வந்த நிலையில், பாறைப்பட்டி பகுதியிலேயே பதுங்கியிருந்த 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.