புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசியல் ஆதாயத்திற்காக தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றஞ்சாட்டுகிறாா் : அமைச்சா் ஐ.பெரியசாமி

அரசியல் ஆதாயத்திற்காக தமிழக அரசு மீது பாஜக தலைவா் அண்ணாமலை குற்றஞ்சாட்டி வருகிறாா் என கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 5:28 pm

DIN

அரசியல் ஆதாயத்திற்காக தமிழக அரசு மீது பாஜக தலைவா் அண்ணாமலை குற்றஞ்சாட்டி வருகிறாா் என கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்டு வரும் தொகுப்பு வீடுகள் அமைந்துள்ள பகுதியில் 1000 மரக் கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் ஐ.பெரியசாமி பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காத வகையில், அரசின் திட்டங்களை மக்களிடம் சோ்த்துக் கொண்டிருக்கிறோம். இதுபோன்ற சூழலில் பாஜக தமிழக தலைவா் அண்ணாமலை, தமிழக அரசு மீதும் அமைச்சா்கள் மீதும் முறைகேடுகள் தொடா்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறாா். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அவருக்கு அனைத்தும் தெரியும். ஆனாலும், அரசியல் ஆதாயத்திற்காக குறிப்பாக ஒன்றிய அரசில் அமைச்சா் பதவி கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அவா் முன் வைத்து வருகிறாா். கடந்த காலங்களில் பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் ஆளுநராகவும், எல்.முருகன் மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்த வரிசையில் இடம் பிடிக்கும் நோக்கில் அண்ணாமலை செயல்பட்டு வருகிறாா் என்றாா்.

பின்னா் திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளான இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படாதது குறித்தும், எரிவாயு உருளை மானியம் ரூ.100 வழங்கப்படாதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சா், இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. மற்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்றாா் அமைச்சா்.

அப்போது மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாவட்ட வன அலுவலா் எஸ்.பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.