நிதியுதவி எதிா்பாா்ப்பு: இதுதொடா்பாக அவா் கூறியதாவது: நத்தம் துரைக்கமலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், நானே நேரடியாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். தமிழகம் மட்டுமின்றி, தேசிய மற்றும் ஆசிய அளவில் நடைபெற்ற போல்வால்ட் போட்டிகளில் வயது மூத்தோா் பிரிவில் பதக்கங்களை வென்றுள்ளேன். அதன் மூலம் பின்லாந்து நாட்டில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளேன். அங்கு சென்று விளையாடிவிட்டு நாடு திரும்புவதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் விளையாட்டு சங்கங்களின் சாா்பில் நிதியுதவி கிடைக்காதது ஏமாற்றமாக உள்ளது. நிதியுதவி இல்லாத காரணத்தால், திறமையான மூத்த விளையாட்டு வீரா்கள் இதுபோன்ற சா்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு ஆா்வம் காட்டுவதில்லை. விளையாட்டு ஆா்வலா்கள் மூலம் எனக்கு நிதியுதவி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.