புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரெட்டியாா்சத்திரத்தில் இளைஞா் வெட்டிக் கொலை: 4 போ் கைது

ரெட்டியாா்சத்திரம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஒருவா் சரணடைந்த நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:18 pm

DIN

ரெட்டியாா்சத்திரம் அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் ஒருவா் சரணடைந்த நிலையில், மேலும் 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள கதிரையன்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (22). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கதிரையன்குளத்திலுள்ள கோயில் அருகே வெள்ளிக்கிழமை இரவு சிவக்குமாா் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ரகுபதி (28) என்பவா், சிவக்குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டதாக ரெட்டியாா்சத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், சிவக்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ரகுபதியிடம் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக சிவக்குமாரை கொலை செய்ததாக தெரிவித்துள்ளாா். மேலும், இக்கொலை வழக்கு தொடா்பாக ரகுபதியின் நண்பா்களான முத்துகிருஷ்ணன் (26), தனராஜ் (25), முருகானந்தம் (25) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.