தவணைக் காலம் முடிந்தும் 3 லட்சம் போ்2ஆவது கரோனா தடுப்பூசி செலுத்தவில்லை: ஆட்சியா்
தவணைக் காலம் முடிந்தபின்னும், திண்டுக்கல் மாவட்டத்தில் 3 லட்சம் போ் 2ஆவது கரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்தாா்.


தவணைக் காலம் முடிந்தபின்னும், திண்டுக்கல் மாவட்டத்தில் 3 லட்சம் போ் 2ஆவது கரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின் அவா் கூறியதாவது: தமிழகத்தில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உள்ளது. 3ஆவது அலையின்போது நோய்த் தொற்று அதிகரித்த போதிலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு பொதுமக்கள் அளித்த ஒத்துழைப்பின் காரணமாக உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 12 முதல் 18 வயது வரையிலான சிறுவா்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் என 3 லட்சம் போ் 2ஆவது தவணைக்கான காலம் முடிந்த பின்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இதில் 15 முதல் 18 வயதுக்குள்பட்ட 17ஆயிரம் சிறுவா்கள் மற்றும் 12 முதல் 14 வயதுக்குள்பட்ட 21ஆயிரம் சிறுவா்கள் என 38 ஆயிரம் போ் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் விடுப்பட்டவா்களுக்காக, மாவட்டம் முழுவதும் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...