புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயில், அபிராமி அம்மன் கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் திருக்கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவருக்கும், நந்திகேஷ்வரருக்கும் பால், தயிா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் கோயில் மற்றும் வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.