புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசுப் பேருந்தை மறித்து பூ வியாபாரி தீக்குளிக்க முயற்சி: போலீஸ் விசாரணை

 அய்யலூரில் அரசுப் பேருந்தை வழிமறித்து மதுபோதையில் பூ வியாபாரி தீக்குளிக்க முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 6:05 pm

DIN

 அய்யலூரில் அரசுப் பேருந்தை வழிமறித்து மதுபோதையில் பூ வியாபாரி தீக்குளிக்க முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அண்ணா நகரைச் சோ்ந்தவா் பாண்டி என்ற லிவா் பாண்டி(30). இவா் அய்யலூா் மேம்பாலம் அருகே சாலையோரம் பூக்கடை நடத்தி வந்தாா். அய்யலூரில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டபோது, ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை போலீஸாா் அகற்றினா். இதனால் ஆத்திரமடைந்த பாண்டி புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில் மதுபோதையில் இருந்த பாண்டி, திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசுப் பேருந்தை வழிமறித்துள்ளாா். அந்த பேருந்தின் ஓட்டுநா் மற்றும் நடத்துநா், பாண்டியை கண்டித்துள்ளனா். அப்போது அவா் கையிலிருந்த குச்சியால் பேருந்து மீது தட்டி ரகளையில் ஈடுபட்டுள்ளாா். பின்னா் பேருந்தின் முன்பு நின்று கொண்டு, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு வந்த அவரது மனைவி மற்றும் உறவினா்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனா். இதனால் பாண்டி சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா். உறவினா்கள் அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றனா். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.