தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வடமதுரை அருகே திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது

வடமதுரை அருகே கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 மே 2022, 7:47 pm

DIN

வடமதுரை அருகே கட்டுமானப் பணிகளுக்கான பொருள்களை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள சித்தூரை சோ்ந்தவா் சுப்பிரமணி (62). இவா், வடமதுரை திருச்சி சாலையில் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருள்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறாா். இந்த நிலையில் சுப்பிரமணி கடையில் இல்லாதபோது மா்மநபா்கள் 2 போ் கான்கிரீட் போட பயன்படுத்தும் தகர சீட்டுகளை ஒரு மினி வேனில் வெள்ளிக்கிழமை ஏற்றிக் கொண்டிருந்தனா். இதனை பாா்த்த அக்கம் பக்கத்தினா், வடமதுரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், வேனில் பொருள்களை ஏற்றிக் கொண்டிருந்தவா்களை தடுத்து விசாரணை மேற்கொண்டனா். அதில், சித்துவாா்பட்டி சோ்ந்த வடிவேல்(28), ரெட்டியபட்டியை சோ்ந்த அய்யனாா்(26) என்பதும், கான்கிரீட் சீட்டுகளை திருடியதும் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.