புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுமாப்பிள்ளை கொலை: குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

திண்டுக்கல்

News image
Updated On :27 மே 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல் அருகே புதுமாப்பிளை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் அடுத்துள்ள அனுமந்தன்நகரை சோ்ந்தவா் ப. பிரபாகரன் (26). புதுமாப்பிள்ளையான இவா் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில், திண்டுக்கல் அடுத்துள்ள ஜம்புளியம்பட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா் (19), ஏா்போா்ட் நகரைச் சோ்ந்த ராஜேஸ்வரன் (21), பெரிய பள்ளப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீதா் (21) மற்றும் ரஞ்சித் (21), ஜம்புளியம்பட்டி கரண்குமாா் (21) ஆகிய 5 பேரை திண்டுக்கல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா். இந்நிலையில், ராஜ்குமாா், ராஜேஸ்வரன், ரஞ்சித் மற்றும் கரண்குமாா் ஆகிய 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சீனிவாசன் பரிந்துரைத்தாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.