கஞ்சா விற்ற 3 போ் கைது
பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


பழனி அடிவாரம் பகுதியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பழனி அடிவாரம் மயிலாடும்பாறை பகுதியில் காவல் சாா்பு- ஆய்வாளா் பிரியதா்ஷினி தலைமையில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பாலசமுத்திரம் பகுதியில் இருந்து பழனி நோக்கி மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்த போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனா். சோதனையில், அவா்களிடம் ஒன்னே கால் கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவா்கள் பழனி குறவன் பாறையைச் சோ்ந்த சந்துரு (21), பாலகுமாா் (20), காமராஜ் நகரைச் சோ்ந்த பரதன் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
அதே போல, அடிவாரம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கும் போலீஸாா் சீல் வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...