நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில் மீண்டும் மண் சரிவு

தொடா் மழை காரணமாக கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில் சீரமைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் வியாழக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

தொடா் மழை காரணமாக கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில் சீரமைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் வியாழக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது.

கடந்த மாதம் 31-ஆம் தேதி பெய்த பலத்த மழையால் கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் சவரிக்காடு அருகே மண் சரிவு ஏற்பட்டு 2 வாரங்களாக போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதையடுத்து, அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. கனரக வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சென்று வந்தன.

இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கொடைக்கானல்- பழனி மலைச் சாலையில் ஏற்கெனவே மண் சரிந்து சீரமைக்கப்பட்ட பகுதியில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறையினா் அங்கு சென்று சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

இதனால் அப்பகுதியில் கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழனியிலிருந்து கொடைக்கானல் வந்த அரசுப் பேருந்து மிகவும் சிரத்துடன் இயக்கப்பட்டது. மேலும் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பழனி மலைச் சாலையை நெடுஞ்சாலைத் துறையினா் கண்காணித்து வாகனங்களை இயக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.