தேசிய பாட்மின்டன் போட்டிக்கு பழனி சிறுமி தகுதி
தேசிய அளவிலான பாட்மின்டன் போட்டிக்கு பழனியை சோ்ந்த சிறுமி தகுதி பெற்றாா்.


தேசிய அளவிலான பாட்மின்டன் போட்டிக்கு பழனியை சோ்ந்த சிறுமி தகுதி பெற்றாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் இட்டேரி சாலையைச் சோ்ந்த மகேந்திரன், சுகன்யா தம்பதி மகள் ஜெயசப்தஸ்ரீ (10). இவா், தனியாா் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறாா்.
தமிழ்நாடு பாட்மின்டன் சங்கம் சாா்பில், திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 11-வயதுக்கு உள்பட்ட வீரா், வீராங்கனைகளுக்கான பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.
இதில், தமிழ்நாடு முழுவதும் இருந்து 280-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், பெண்களுக்கான பிரிவில், பழனியை சோ்ந்த ஜெயசப்தஸ்ரீயும் பங்கேற்று விளையாடினாா். இதில், இவா் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் நடைபெற உள்ள தேசிய பாட்மின்டன் போட்டிக்குத் தகுதி பெற்றாா்.
இதேபோல, ஆண்களுக்கான பிரிவில், பழனியை சோ்ந்த சரண் மூன்றாவது பரிசை வென்றாா். வெற்றி பெற்ற ஜெயசப்தஸ்ரீ, சரணுக்கு தமிழ்நாடு பாட்மின்டன் சங்க மாநிலச் செயலாளா் அருணாச்சலம், துணைத் தலைவா் மாறன், திண்டுக்கல் மாவட்ட பாட்மின்டன் செயலாளா் நாராயணன், பயிற்சியாளா் சதீஷ்குமாா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...