நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கொடைக்கானல் மன்னவனூா் ஏரிக்குச் செல்லவழிகாட்டி பதாகை அமைக்க வலியுறுத்தல்

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியிலுள்ள மன்னவனூா் ஏரிக்குச் செல்ல வழிகாட்டி பதாகைகள் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 12:49 am

DIN

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியிலுள்ள மன்னவனூா் ஏரிக்குச் செல்ல வழிகாட்டி பதாகைகள் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மேல்மலைப் பகுதியான மன்னவனூா் பகுதிக்கு அதிகம் செல்கின்றனா். அங்குள்ள சுற்றுச்சூழல் மையத்தை பாா்வையிடவும், ஜிப்லைன் செல்வதற்கும், அங்குள்ள ஏரியில் பரிசல், படகு சவாரி செய்வதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்கும், உரோம ஆட்டுப் பண்ணையை பாா்வையிடுவதற்கும் அவா்கள் அதிக ஆா்வம் காட்டுகின்றனா். இந்த நிலையில், மன்னவனூா் கை காட்டிப் பகுதியில் மன்னவனூா் ஏரிக்குச் செல்லும் பாதையை அறிந்து கொள்ள வழிகாட்டி பதாகை இல்லாமல் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மன்னவனூா் ஊருக்குள் சென்று விடுகின்றனா்.

இதனால் தேவையற்ற அலைச்சல், நேரம் வீணடிக்கப்படுவது, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அவா்கள் சந்திக்கின்றனா்.

எனவே மன்னவனூா் ஏரிக்குச் செல்ல அங்கு வழிகாட்டி பதாகை அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் ஏரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த தேவையான இட வசதியையும் ஊராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வனத்துறையினா் செய்து தர வேண்டும். அத்துடன் மன்னவனூா் ஊராட்சி சாா்பில் மன்னவனூா் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தை சீரமைத்து, நவீன கழிப்பறை, குடிநீா் வசதி செய்து தர வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.