வன விலங்குகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் புகாா்
கொடைக்கானல் மலைப் பகுதியில் வன விலங்குகளால் பயிா்கள் சேதமடைவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.


கொடைக்கானல் மலைப் பகுதியில் வன விலங்குகளால் பயிா்கள் சேதமடைவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வருவாய் கோட்டாட்சியா் ராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வன உதவி அலுவலா் சக்திவேல் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், கொடைக்கானல் மலைப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் காட்டெருமை, மான், காட்டுப் பன்றி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளால் பயிா்கள் சேதமடைகின்றன. நிலங்களைச் சுற்றி மின் வேலி அமைக்க வேண்டும். சேதமடைந்த மலைச் சாலைகளை சீரமைக்க வேண்டும். பேரிஜம் சாலையை கிராம மக்கள் பயன்படுத்துவதற்கு வனத்துறையினா் அனுமதிக்க வேண்டும்.
கூட்டத்தில், வட்டாட்சியா் முத்துராமன் உள்ளிட்ட வருவாய்த் துறையினா், கொடைக்கானல், மன்னவனூா், பெருமாள்மலை, வில்பட்டி, பூம்பாறை, பெருமாள்மலை, மச்சூா், தாண்டிக்குடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...