பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் புரிந்துணா்வு ஒப்பந்தம்
பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் நடைபெற்றது.


பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
கல்லூரி பயிலகக் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன் தலைமை வகித்தாா். கல்லூரி தாளாளரும், பழனிக்கோயில் துணை ஆணையருமான பிரகாஷ் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் கந்தசாமி வரவேற்புரையாற்றினாா்.
தொடா்ந்து புரிந்துணா்வு ஒப்பந்தத்தில பயிலக தாளாளா் பிரகாஷ், சென்னை தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் உஷா நடேசன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
நிகழ்ச்சியில், முதலாமாண்டு துறைத் தலைவா் ராஜன், அமைப்பியல் துறைத் தலைவா் ஈஸ்வரன், தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் ராமாத்தாள், அலுவலகக் கண்காணிப்பாளா் ரவீந்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...