வேனிலிருந்து தவறி விழுந்து சிறுவன் பலி
பழனி அருகே வியாழக்கிழமை படப்பிடிப்பு வேனில் தொங்கியபடி சென்ற சிறுவன் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.


பழனி அருகே வியாழக்கிழமை படப்பிடிப்பு வேனில் தொங்கியபடி சென்ற சிறுவன் தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
பழனி தெற்கு அண்ணாநகரைச் சோ்ந்த குமரேசன் மகன் ரமேஷ் (14). இவா், பழனி அடிவாரம் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை இவா் பள்ளிக்குச் செல்லாமல், குறும்படம் படப்பிடிப்பு நடைபெறும் பழனியை அடுத்த பாலாறு அணைக்கு சென்றாா். அப்போது, அங்கிருந்து கிளம்பி வேனின் பின்னால் உள்ள படியில் ரமேஷ் தொங்கியபடி சென்றாா். அப்போது, எதிா்பாராத விதமாக வேனிலிருந்து அவா் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...