ஹரியாணாவில் பனிச் சறுக்குப் போட்டி: தமிழக அணியில் 16 போ் பங்கேற்பு

தேசிய அளவிலான பனிச் சறுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங்) போட்டியில் தமிழ்நாடு அணிக்காக திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் பயிற்சி பெற்ற 16 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
தேசிய அளவிலான பனிச் சறுக்குப் போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பாக செல்லும் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டரங்கில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளை வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்த பயிற்சியாளா், பொதுமக்கள்.
தேசிய அளவிலான பனிச் சறுக்குப் போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பாக செல்லும் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டரங்கில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளை வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்த பயிற்சியாளா், பொதுமக்கள்.
Updated on
1 min read

ஹரியாணா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான பனிச் சறுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங்) போட்டியில் தமிழ்நாடு அணிக்காக திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் பயிற்சி பெற்ற 16 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

ஹரியாணா மாநிலத்தில் தேசிய அளவிலான பனிச் சறுக்குப் போட்டி வருகிற ஜனவரி 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில், தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்க முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தின் சாா்பில், சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்ற 16 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்னா்.

போட்டியில் கலந்து கொள்ள ஹரியாணா சென்ற, மாணவ மாணவிளை பயிற்சியாளா் பிரேம்குமாா் தலைமையில் விளையாட்டு வீரா்கள், பெற்றோா்கள், பயிற்சியாளா்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com