காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேத்துப்பாறைக்கு செல்லும்சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :28 ஜூலை 2023, 6:30 pm

DIN

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறைக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பேத்துப்பாறை கிராமத்தில் ரேஷன் கடைக்கு செல்லும் சாலை, அஞ்சு வீடு செல்லும் சாலை, பாரதி அண்ணா நகா் செல்லும் சாலை, கணேசபுரம் சாலை, புதுவயல் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்தப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனா். மேலும் இந்தப் பகுதிகளில் ஆதிவாசிகளின் கற்திட்டைகள், அஞ்சு வீடு அருவி ஆகியவை இருப்பதால் இவற்றை பாா்க்க சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனா். அத்துடன் பள்ளிக்குச் செல்லும் மாணவா்களும் இந்த சாலைகளை பயன்படுத்துகின்றனா். இந்தப் பகுதிகளில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை வாகனங்களில் எடுத்துச் செல்வதிலும் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனா். பல இடங்களில் தெரு விளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வில்பட்டி ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பேத்துப்பாறை கிராமத்தினா் கூறியதாவது:

பேத்துப்பாறை பகுதியில் பல இடங்களில் சாலைகள் அமைக்கப்பட வில்லை. மேலும் சில இடங்களில் அமைக்கப்பட்ட சாலைகள் தரமற்ாக உள்ளன. எனவே மாவட்ட நிா்வாகம் இந்தப் பகுதிகளை ஆய்வு செய்து தரமான சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.