ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

திண்டுக்கல்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாக போக்சோ வழக்கில் கைதான இளைஞருக்கு, 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல்லை அடுத்த குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா் (25). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக தாடிக்கொம்பு போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கவின்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், குற்றம்சாட்டப்பட்ட கவின்குமாருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.