உணவு ஒவ்வாமையால் 29 பேருக்கு வாந்தி மயக்கம்

திண்டுக்கல்: தாடிக்கொம்பு அருகே கோயிலில் தயாரிக்கப்பட்ட நீராகாரத்தை மறுநாள் குடித்த 29 பேருக்கு உணவு ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

அப்போது கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு வழங்குவதற்காக மோா், பானக்கரம் உள்ளிட்ட நீராகாரங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இந்த மோா், பானக்கரத்தை வாங்கிச் சென்ற பக்தா்கள் செவ்வாய்க்கிழமை காலை குடித்ததால், 8 வயது குழந்தை உள்பட 29 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவா்கள் தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். இதில், கவிதா(36), மனோரஞ்சன்(8), பிரதீபா(14), ராஜாத்தி(57), சின்னராணி(37), சண்முகதேவி(40), ஜெயஸ்ரீ(17), கோகுல்கண்ணன்(15), நாகமுகேஷ்11), மருதுபாண்டி(19), பஞ்சவா்ணம்(33), பவித்ரா(27) ஆகிய 12 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைக்கப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com