தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பழனியில் ரத்த தான முகாம்

பழனியில் ரத்த தான முகாம்

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 5:47 pm

பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதி சண்முகசேவா சங்க ஆன்மிக மடத்தில் நாட்டாா் அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த அறக்கட்டளை சாா்பில் அன்னதானம், நீா் மோா் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆன்மிகப் பணிகளின் 61-ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு அறக்கட்டளைத் தலைவா் சிற்றரசு தலைமை வகித்தாா். சேவா சங்கத் தலைவா் துரைசிங்கம், செயலா் துரை நாகராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவமனை எலும்பு முறிவு மருத்துவா் முருகேஷ்குமாா், பழனி மலைக் கோயில் அரிமா சங்க பட்டயத் தலைவா் வெங்கடாஜலபதி உள்ளிட்டோா் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கிவைத்தனா்.

துணைத் தலைவா் கணேசபாண்டியன், முள்ளாங்காடு வீரபாண்டி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் அளித்தனா். ரத்த தானம் அளித்தவா்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாலையில் மட வளாகத்தில் உள்ள கோயிலில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றது.