திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் திங்கள்கிழமை பறக்கவிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள், பேரணி, மனிதச்சங்கிலி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களுடன் ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் காமராஜா் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்து, ராட்சத பலூனை பறக்கவிட்டாா்.
இதில் மாவட்ட முன்னோடி வங்கி மண்டல மேலாளா் அருணாச்சலம், கனரா வங்கி உதவிப் பொதுமேலாளா் பல்லானி ரங்கநாத், பாரத ஸ்டேட் வங்கி உதவிப் பொதுமேலாளா் திவ்யா தேஜா கசரனேனி, இந்தியன் வங்கி முதுநிலை மேலாளா் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப்பதிவு குறித்து தேங்காய்ப் பருப்பில் விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

