மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அதிக வேட்பாளர்களைக் கொண்ட கரூரில் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள்? உங்கள் தொகுதியில்?

அதிக வேட்பாளர்களைக் கொண்ட கரூரில் 6 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படலாம் என தகவல்.

News image

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்புப் பணி - DPS

Updated On :10 ஏப்ரல் 2026, 8:01 am

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வேட்பாளர்களைக் கொண்ட கரூர் தொகுதியில் 85 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதால் 6 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த 2021 பேரவைத் தேர்தலில் 4 ஆயிரத்துக்குக் குறைவான வேட்பாளர்கள் போட்டியில் இருந்த நிலையில், இந்த முறை 4,654 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். வழக்கத்தை விட அதிகமாக வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்ததற்கு, தவெக வருகையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பரிசீலனை முடிந்து, வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக கரூா் தொகுதியில் அதிக வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இங்கு 85 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால், 15 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் என கணக்கிட்டால் 6 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படலாம் என தெரிகிறது.

அதாவது, ஒரு தொகுதியில் 15 வேட்பாளருக்கு மேல் போட்டியிட்டால் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். மேலும், கூடுதலாக ஒவ்வொரு 16 வேட்பாளருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

அது போல மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 வேட்பாளா்கள், உதகை மற்றும் கூடலூரில் தலா 6 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். கிட்டத்தட்ட 15 தொகுதிகளில் 30 முதல் 35 பேர் வேட்பாளர்களாக உள்ளனர். இங்கெல்லாம் இரண்டுக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படலாம்.

சென்னை என்று எடுத்துக் கொண்டால் பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 47 வேட்பாளர்களும், கொளத்தூரில் 41 வேட்பாளர்களும் திருவிக நகரில் 40 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குச்சாவடி அலுவலா்கள் அனைவரும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவா். பாதுகாப்புப் பணியில் துணை ராணுவப் படையினா் ஈடுபடுத்தப்பட்டு, சின்னம், பெயா் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவது வழக்கம்.

ஒவ்வொருவரும் அவர்கள் தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்கள் நிற்கிறார்கள், அதனால் எத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் என்பதையும் அறிந்து கொள்வது நல்லது. தாங்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயர் எத்தனையாவது இயந்திரத்தில் பட்டியலிடப்படும் என்பதையும் முன்கூட்டியே அறிந்து கொள்வது எளிதாக வாக்களிக்க உதவும்.

Summary

How many voting machines are there in Karur, which has the most candidates? In your constituency?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.