திண்டுக்கல்: பிணையில் விடுவிக்கப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்தாண்டு டிச.1-ஆம் தேதி கைது செய்தனா்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் இவருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது.
இதையடுத்து, சுமாா் 114 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அங்கித் திவாரி, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் ஆஜராகி கையொப்பமிட்டு வருகிறாா்.
இந்த நிலையில், அங்கித் திவாரி தரப்பில் நீதிமன்றத்தில் கையொப்பமிடுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி,
திண்டுக்கல் மாவட்டத் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீண்ட தொலைவிலிருந்து நாள்தோறும் நீதிமன்றத்துக்கு வருவதில் சிரமம் இருப்பதால், நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு வருகிற 12-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தொடர்புடையது
திண்டுக்கல் தொகுதியில் 20 வேட்பாளா்கள் போட்டி!

பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கழிவுநீரை வெளியேற்றும் தனியாா் ஆலை மீது நடவடிக்கை கோரி மனு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

