சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பழனியில் விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

பழனியில் விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

News image

பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கத்தினா்.

Updated On :8 ஏப்ரல் 2024, 5:19 pm

பழனி: விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி, தமிழ்நாடு உழவா் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் பழனியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி கோட்டாட்சியா் அலுவலகம் முன் ந டைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில கொள்கை பரப்புச் செயலா் காளிதாஸ், மாநில ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், பெரியம்மாபட்டியில் நில உச்சவரம்பு திட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட இடங்களை விவசாயிகளிடம் ஒப்படைத்து பட்டா, சிட்டா வழங்க வேண்டும்.

புறம்போக்கு, நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.