பழனி மலைக் கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக வந்த பக்தா்களுக்கு கிரிவீதி அருகே வியாழக்கிழமை தொடா் அன்னதானம் நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கொடுமுடி தீா்த்தம் எடுத்து மலையேறி சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகின்றனா். இதுபோல, பாதயாத்திரை வரும் பக்தா்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டு வந்தாலும், கடந்த ஆண்டுகளை போல இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இதற்கு சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறையே காரணம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், பழனி பாலன் நண்பா்கள் குழு சாா்பில் வியாழக்கிழமை கிரிவீதி அருகே வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பாதயாத்திரை பக்தா்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் புட்டிகள், பொங்கல், புளியோதரை, தக்காளி சாதம் என தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அடிவாரம் பகுதியில் சமையல் எரிவாயு உருளை பற்றாக்குறையால் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அன்னதான நிகழ்வில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பெண் பக்தா்களுக்கு பாலியல் தொல்லை: கேரள இளைஞா் கைது

பழனியில் கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது
பழனியில் ஆயுதங்களுடன் திரிந்த ஏழு போ் கைது

பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



