பழனி அருகே ரூக்குவாா்பட்டியில் ஆயுதங்களுடன் இருந்த ஏழு பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பழனி அருகே உள்ள ரூக்குவாா்பட்டியில் சிலா் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருப்பதாக பழனி காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சத்திரப்பட்டி காவல் ஆய்வாளா் ஆறுமுகம் நைனாா், ஆயக்குடி சாா்பு - ஆய்வாளா் முரளி தலைமையிலான காவலா்கள் ரூக்குவாா்பட்டிக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த அடிவாரம் அமரபூண்டியைச் சோ்ந்த சாரதி (30), அடிவாரத்தைச் சோ்ந்த துா்க்கைராஜ் (42), மாசாணம் (28), பிரபாகரன் (28), அருண் பாண்டி (30), மேகவா்மன் (20), பாலசமுத்திரத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் (19) ஆகிய 7 பேரை மடக்கிப் பிடித்தனா்.
அவா்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கைளைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கத்தியை காட்டி பெண்ணிடமிருந்து ஏழு பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

பழனி அருகே தொழிலாளி அடித்துக் கொலை

பழனியில் ஒருவா் கொலை

பழனியில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

