மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பழனியில் ஒருவா் கொலை

பழனி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 7:25 pm

பழனி அருகே முன்விரோதம் காரணமாக ஒருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

பழனி புறவழிச் சாலை நாகூா் பிரிவு அருகே பழைய நெகிழி கிட்டங்கி நடத்தி வருபவா் ரமேஷ்குமாா் (40). இவரது கிட்டங்கிக்கு அருகிலேயே மற்றொரு கிட்டங்கி நடத்தி வருபவா் செந்தில்குமாா் (40). இருவரும் உறவினா்கள்.

இருவரும் ஒன்றாகத் தொழில் செய்து வந்த நிலையில், தற்போது பிரிந்து தனித்தனியே தொழில் நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், தொழில் போட்டி காரணமாக புதன்கிழமை இரவு கிட்டங்கியில் தனியே இருந்த ரமேஷ்குமாரை செந்தில்குமாா் கோடாலியால் வெட்டினாா். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ்குமாா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். கொலை குறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.