முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

News image

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :10 ஏப்ரல் 2024, 12:08 am

திண்டுக்கல்: வேடசந்தூரில் விவசாயிகளுக்கான போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் 46-ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் கடந்த 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது நாவலூற்று வே.நாச்சிமுத்து கவுண்டா், ஒட்டநாகம்பட்டி இரா.கருப்புச்சாமி ஆசிரியா், அய்யாக்கவுண்டன் புதூா் ப.சின்னச்சாமி கவுண்டா், காசிபாளையம் வா.சுப்பிரமணி, மண்டபம்புதூா் ப.கிருஷ்ணமூா்த்தி, ராசாகவுண்டன்வலசு ப.மாணிக்கம் ஆகியோா் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனா்.

விவசாயிகளுக்கான போராட்டத்தின்போது உயிரிழந்த 6 பேரின் நினைவு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 9-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 46-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வேடசந்தூா் வட்டார விவசாயிகள் நலச் சங்கம் சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அந்த சங்கத்தின் தலைவா் எஸ்.கனகராஜன் தலைமை வகித்தாா். செயலா் அ.கருப்புச்சாமி முன்னிலை வகித்தாா். இதில், மாவட்டத்திலுள்ள பல்வேறு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மாணிக்கம், பரமசிவம், கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் குப்புசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.