அம்பேத்கா் பிறந்த தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஷேக்முகையதீன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், தோ்தல் செலவின கணக்கு பாா்வையாளா் ஜரோன்தே விஷால் தஷ்ரத், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல, திண்டுக்கல்- திருச்சி புறவழிச்சாலையிலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மண்டல பொது மேலாளா் எம்.டேனியல் சாலமன் தலைமை வகித்தாா்.
இதில் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். திண்டுக்கல் மண்டலத்துக்குள்பட்ட அனைத்து கிளைகளிலும் இதேபோன்று உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி, உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

