திண்டுக்கல், ஏப்.12: பிணையில் விடுவிக்கப்பட்ட அங்கித் திவாரி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில், மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2023, டிச.1-ஆம் தேதி கைது செய்தனா். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் நீதிமன்றம் இவருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது.
இதையடுத்து, சுமாா் 114 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், பிணையில் விடுவிக்கப்பட்டு, கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலையாகி கையொப்பமிட்டு வருகிறாா்.
இந்த நிலையில், நீதிமன்றத்தில் கையொப்பமிடுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, அங்கித் திவாரி தரப்பில் திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில், நீண்ட தொலைவிலிருந்து நாள்தோறும் நீதிமன்றத்துக்கு வருவதில் சிரமம் இருப்பதால், நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தரப்பில் விளக்கம் அளிப்பதற்கு 10 நாள்கள் அவகாசம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் ஜெ.மோகனா ஒத்திவைத்தாா்.
தொடர்புடையது
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்கள் ஏப். 7-இல் இறுதி விசாரணை

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழக்கு: விசாரணை ஏப். 1-க்கு ஒத்திவைப்பு

ஆவின் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சா் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

