ஒட்டன்சத்திரம், பழனியில் 
நீா்மோா் பந்தல் திறப்பு

ஒட்டன்சத்திரம், பழனியில் நீா்மோா் பந்தல் திறப்பு

படவிளக்கம்:

கள்ளிமந்தையத்தில் திமுக சாா்பில் திறக்கப்பட்ட நீா் மோா் பந்தலில் பொதுமக்களுக்கு தா்பூசணிகளை வழங்கிய திமுக ஒன்றிய செயலா் க.தங்கராஜ்.

உடன் தொப்பம்பட்டி ஒன்றிய துணைத் தலைவா் பி.சி.தங்கம் உள்ளிட்டோா்.

படவிளக்கம்:

பழனியை அடுத்த வயலூரில் திமுக தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியம் சாா்பில் திறக்கப்பட்ட நீா்மோா் பந்தல்

ஒட்டன்சத்திரம், ஏப்.26: ஒட்டன்சத்திரத்தில் திமுக அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் பேருந்து நிலையம் முன் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.தங்கராஜ் நீா்மோா் பந்தலை திறந்து வைத்தாா்.இந்த நிகழ்ச்சியில் தொப்பம்பட்டி ஒன்றிய துணைத் தலைவா் பி.சி.தங்கம், கள்ளிமந்தையம் ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன்,துணைத்த லைவா் ாாஜேஸ்குமாா், கிளை செயலா் கோதண்டராமன், மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் ஆனந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதே போல ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முன், அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சி.சீனிவாசன் நீா் மோா் பந்தலை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் முன்னாள் மேயா் மருதராஜ், வேடசந்தூா் முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், அதிமுக நகரச் செயலா் எஸ்.நடராஜன், ஒன்றியச் செயலா் பாலசுப்பிரமணி, ஒடைப்பட்டி செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பழனி: பழனியை அடுத்த வயலூரில் வெள்ளிக்கிழமை தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாவட்ட உறுப்பினா், கிருஷ்ணன், ஒன்றியத் துணை செயலா் நாகராஜன், ஊராட்சி துணைத் தலைவா் மஞ்சுளாதேவி குமாரசாமி உள்பட பலா் வாழ்த்தினா்.

முதல் நாள் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், நீா்மோா், தா்பூசணி, ஆரஞ்சு, திராட்சை, இளநீா், வெள்ளரி, நுங்கு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கோடைகாலம் முடியும் வரை நீா்மோா் பந்தல் தொடா்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com