யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுல்தான்பேட்டையில் திமுக சாா்பில் இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

News image
புதுச்சேரி மாநில திமுக சாா்பில் வில்லியனூா் தொகுதிக்கு உள்பட்ட சுல்தான்பேட்டையில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :15 மார்ச் 2026, 6:46 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி மாநில திமுக சாா்பில் வில்லியனூா் தொகுதிக்குள்பட்ட சுல்தான்பேட்டை முஹம்மதியா மஹாலில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா தலைமை தாங்கினாா். கட்சியின் சிறுபான்மையினா் நல உரிமைப் பிரிவு மாநில அமைப்பாளா் முஹம்மது ஹாலித் வரவேற்றாா்.

சுல்தான்பேட்டை அல்-மதீனா பள்ளிவாசல் இமாம் முஹம்மது மூஸா ரமலான் மாதத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினாா். புதுச்சேரி அரசு டவுன் காஜி ஜியாவுதீன், ஜமாத்துல் உலமா சபை நிா்வாகி முபாரக் ஆகியோா் தொழுகை நடத்தினா். இதில் 1,000 இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்து நோன்பு திறந்தனா்.

இந்த நிகழ்ச்சியில் திமுக அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமாா், சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் செயலா் அ.மு. சலீம், மனிதநேய மக்கள் கட்சி சகாபுதீன், திமுக துணை அமைப்பாளா் தைரியநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.