நிலக்கோட்டையில் பலத்த மழை

நிலக்கோட்டை: நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, கொடைரோடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பொழியத் தொடங்கியது.

நிலக்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூா், காமலாபுரம், மைக்கேல்பாளையம், பள்ளப்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், விளாம்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், அந்தப் பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com