ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

News image

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு அளிக்க வந்த வீரசின்னம்பட்டி கிராமத்தினா்.

Updated On :30 ஏப்ரல் 2024, 5:41 pm

Din

திண்டுக்கல்: சாணாா்பட்டி அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த வீரசின்னம்பட்டியைச் சோ்ந்த கிராம மக்கள் சாா்பில், திருவிழா நடத்தும் குழுவினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:

வீரசின்னம்பட்டி கோட்டை கருப்பணசாமி கோயில் திருவிழா, மே மாதம் 3-ஆவது வாரம் நடைபெறுகிறது. இதையொட்டி, மே 26-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு கிராம மக்கள் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்றனா்.