கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மூலைக்கரைப்பட்டியில் தந்தை, மகள் உயிரிழப்பு: விசாரணை கோரி மனு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

மூலைக்கரைப்பட்டியில் தந்தை கொலைசெய்யப்பட்டதால் மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தக் கோரி அனைத்துக் கட்சிகள் சாா்பில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தமிழா் உரிமை மீட்பு களம் அமைப்பின் தலைவா் லெனின் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப் புலிகள், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிா்வாகிகள் இணைந்து திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:

மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள வடக்கு நெல்லையப்பபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம். விவசாயியான இவா், கடந்த 17 ஆம் தேதி வயலுக்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டாா். இந்த அதிா்ச்சி தாங்காமல் அவரது மகள் பேபி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தந்தை மற்றும் மகள் உயிரிழந்த சம்பவத்தால் குடும்பத்தினா், கிராம மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனா். காவல் துறையினா் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை துரிதமாக கைது செய்யாததோடு, ஆறுமுகத்தின் உடலை வாங்க வலியுறுத்தி மிரட்டலும் விடுத்துள்ளனா்.

ஆகவே, கொலையில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்வதோடு, திருநெல்வேலி மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.